​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

Published : Sep 06, 2018 8:42 AM

தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

Sep 06, 2018 8:42 AM

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கருவந்தா செல்லும் தனியார் பேருந்தின் படிக்கட்டுகளிலும் பின் பகுதி ஏணியிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்களா சுரண்டையிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி நேரத்தில் இந்த தடத்தில் அரசு பேருந்து வசதி இல்லாததால் மாணவ,மாணவிகள் தனியார் பேருந்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. நாள்தோறும் இவ்வாறு ஆபத்தான பயணத்தையே மாணவர்கள் மேற்கொண்டு வரும் நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.