​​ தெலங்கானா சட்டப்பேரவை இன்று கலைக்கப்பட வாய்ப்பு...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானா சட்டப்பேரவை இன்று கலைக்கப்பட வாய்ப்பு...

தெலங்கானா சட்டப்பேரவை இன்று கலைக்கப்பட வாய்ப்பு...

Sep 06, 2018 8:37 AM

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கலைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதிக் கட்சி 63 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்தபோதிலும்,மக்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, முன்கூட்டியே தேர்தலை சந்திக்க தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி தயாராகி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று காலை தெலங்கானா அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு நாளைமுதல் 100 பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய டி.ஆர்.எஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.