​​ ஹெல்மெட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்....
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹெல்மெட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்....

ஹெல்மெட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்....

Sep 06, 2018 8:10 AM

இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கொரட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் ஆணையரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள் 2015 முதல் 18 வரை விழிப்புணர்வுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது உள்பட சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் விழிப்புணர்வை உருவாக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜி.பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.