​​ 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம்

2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம்

Sep 06, 2018 8:01 AM

சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே இன்று அதிகாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை கடற்கரை வழியாக பாமாயில் ஏற்றி வந்த லாரியும் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் தீ பிடிக்காத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பாமாயில் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி மாடுகள் சாலையை கடப்பதாலும் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.