​​ மல்யுத்தப் பயிற்சி மையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் 20 பேர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மல்யுத்தப் பயிற்சி மையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் 20 பேர் பலி

Published : Sep 06, 2018 5:14 AM

மல்யுத்தப் பயிற்சி மையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் 20 பேர் பலி

Sep 06, 2018 5:14 AM

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூல் அருகே செயல்பட்டு வந்த மல்யுத்தப் பயிற்சி மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தஷ்த் இ பார்சி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதில் சில பத்திரிகையாளர்களும் அடக்கம் என காபூல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.