​​ சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

Published : Sep 06, 2018 2:02 AM

சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

Sep 06, 2018 2:02 AM

அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெற இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தனது செய்திக் குறிப்பில் குட்கா, பான்மசாலா தொடர்புடைய மாதவராவ் என்ற நபரை நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி தன்னை அரசியலில் இருந்து அழித்துவிட சிலர் மனப்பால் குடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற வகையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாகவும், சி.பி.ஐ. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ள அவர் குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்று கூறியுள்ளார். தனக்கு மடியில் கனம் இல்லாததால் வழியில் பயம் இல்லை என்றும், பிரச்சினையை சட்ட மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு வெளிவர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.