​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போட்ஸ்வானாவில் தந்தங்களுக்காக 90 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டன

Published : Sep 06, 2018 1:42 AM

போட்ஸ்வானாவில் தந்தங்களுக்காக 90 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டன

Sep 06, 2018 1:42 AM

தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) 90 யானைகள் அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டுள்ளன.

எல்லைகளற்ற யானைகள் பாதுகாப்பு மையம் சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது வனப்பகுதியில் தாகத்தோடு நீர் அருந்த வரும் யானைகளைக் குறிவைத்து, வேட்டையாடிய கும்பல் அவற்றின் தலையை வெட்டி அதிலிருந்த தந்தத்தை எடுத்துச் சென்றுள்ளது. இப்படியாக 90 யானைகளை வேட்டையாடிய கும்பலைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

உலகிலேயே அதிகளவில் அதாவது ஒரு லட்சத்து 30 ஆயிரம் யானைகளைக் கொண்டிருந்த போட்ஸ்வானாவில் தற்போது வேட்டையாளர்களால் யானைகள் இனம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டிலேயே சமீப கால வேட்டைகளில் அதிக யானைகள் கொல்லப்பட்டது இந்த முறைதான் என வன உயிர் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.