​​ மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன், தமிழக அமைச்சர் காமராஜ் சந்திப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன், தமிழக அமைச்சர் காமராஜ் சந்திப்பு

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன், தமிழக அமைச்சர் காமராஜ் சந்திப்பு

Sep 06, 2018 12:33 AM

மத்திய நுகர்பொருள் விவகாரங்கள், பொதுவினியோகம், மற்றும் உணவுத்துறை அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வானை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்துப் பேசினார்.

டெல்லி கிருஷி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் கால அளவை நீட்டிப்பது குறித்த தமிழக முதலமைச்சரின் கோரிக்கைக் கடிதத்தை அவர் வழங்கினார். இந்த சந்திப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த், டாக்டர் கோபால் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.