​​ குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு கால அவகாசம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு கால அவகாசம்

Published : Sep 06, 2018 12:17 AM

குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு கால அவகாசம்

Sep 06, 2018 12:17 AM

குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு டிசம்பர் வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 விடைத்தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடு நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்யக் கோரி திருநங்கை ஸ்வப்னா தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை மத்திய குற்றப் பிரிவு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 74 விடைத்தாள்களை தடயவியல் கணினி ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டியிருப்பதாலும், முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கவும் மத்திய குற்றப் பிரிவு தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்று, வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை அன்றைய தினத்திற்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.