​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுலை புகழ்ந்தும், மோடியை விமர்சித்தும் டுவிட் செய்த பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் தன்னிலை விளக்கம் அளித்தார்

Published : Sep 06, 2018 12:12 AM

ராகுலை புகழ்ந்தும், மோடியை விமர்சித்தும் டுவிட் செய்த பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் தன்னிலை விளக்கம் அளித்தார்

Sep 06, 2018 12:12 AM

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும் தாம் பதிவிடவில்லை என்றும், அவ்வாறு டுவிட் செய்த தனது அட்மினை நீக்கிவிட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் கூறியிருக்கிறார்.

கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கடந்த 31ஆம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில், உணவு அருந்தியது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பி விமர்சித்தனர். இதற்கு நேர் எதிராக, பாஜக மூத்த தலைவர் தருண் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், பிரதமர் மோடி பற்றி கடுமையான விமர்சனத்துடன் கூடிய பதிவும் இடப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவின் அதிருப்தி வெளியிட்டதைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள தருண் விஜய், தாம் அவ்வாறு பதிவிடவில்லை என்றும், தவறான பதிவுகளை இட்ட அட்மினை நீக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.