​​ விருதுநகர் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகர் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை

Published : Sep 05, 2018 11:55 PM

விருதுநகர் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை

Sep 05, 2018 11:55 PM

விருதுநகர் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி,காரியாபட்டி, அருப்புக்கோட்டை தாலுகாக்களில் சவுடு மண் அள்ளுவதாக அனுமதி பெற்று விட்டு ஆற்று மணலை அள்ளுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், எனவே சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது விருதுநகர் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர், காரியாப்பட்டி, திருச்சுழி வட்டாட்சியர்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.