​​ ரபேல் ஒப்பந்தம் வான் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் - இந்திய விமான படையின் துணை தளபதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் ஒப்பந்தம் வான் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் - இந்திய விமான படையின் துணை தளபதி

ரபேல் ஒப்பந்தம் வான் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் - இந்திய விமான படையின் துணை தளபதி

Sep 05, 2018 11:39 PM

நமது துணை கண்டத்தின் வான் பாதுகாப்பில், ரபேல் போர் விமான ஒப்பந்தம், புரட்சியை ஏற்படுத்தும் என இந்திய விமான படையின் துணை தளபதி ஆர்.நம்பியார் ((R.Nambiar)) கூறியிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பும், வான் பாதுகாப்பு ஆற்றல் கல்வி மையமும் இணைந்து நடத்திய செமினாரில் பங்கேற்று உரையாற்றிய அவர் நமது எதிர்கால தேவைகள் குறித்து தெளிவாக அறிந்திருந்தும், தவறான காரணங்களுக்காக, ரபேல் ஒப்பந்தம் விவாத பொருளாக மாற்றப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

இவரது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில், விமானப்படையின் மற்றொரு துணை தளபதியான எஸ்.பி.டியோவும்((SB Deo)), விளக்கம் அளித்திருக்கிறார். ரபேல் போர் விமானங்கள் மிகவும் அழகானவை என்பதோடு, எதிரியின் நிலைகளை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்தும் அதிக திறன் மிக்கவையாகும் என்று டியோ கூறியிருக்கிறார்.