​​ முன்னாள் காவல்துறை அதிகாரியிடம் 22 ஆண்டுகள் பழமையான வழக்கில் விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் காவல்துறை அதிகாரியிடம் 22 ஆண்டுகள் பழமையான வழக்கில் விசாரணை

முன்னாள் காவல்துறை அதிகாரியிடம் 22 ஆண்டுகள் பழமையான வழக்கில் விசாரணை

Sep 05, 2018 10:55 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரியை 22 ஆண்டுகள் பழமையான வழக்கில் சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1996-ஆம் ஆண்டு பனஸ்கந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஞ்சீவ் பட் என்பவர் இருந்தபோது வழக்கறிஞரான ராஜ்புரோகித் என்பவர் ஓட்டல் அறை ஒன்றில் போதைப் பொருட்களுடன் பனஸ்கந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் ராஜஸ்தான் மாநில போலீசாரின் விசாரணையில் பனஸ்கந்தா போலீசார் ராஜ்புரோகித்தை ராஜஸ்தானின் பாலி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திவந்து போதைப் பொருளுடன் விடுதி அறையில் அடைத்து வைத்தது தெரிய வந்தது.

வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியது. இந்த வழக்கில் சஞ்சீவ் பட்டுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவரிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.