​​ நடவடிக்கை சரியில்லாத வாடிக்கையாளருக்குத் தடை - உபெர் முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடவடிக்கை சரியில்லாத வாடிக்கையாளருக்குத் தடை - உபெர் முடிவு

Published : Sep 05, 2018 10:16 PM

நடவடிக்கை சரியில்லாத வாடிக்கையாளருக்குத் தடை - உபெர் முடிவு

Sep 05, 2018 10:16 PM

காரில் பயணம் செய்யும் வாடிக்கையாளரின் நடவடிக்கை சரியில்லையெனில், அவர்களை வாடிக்கையாளராக தொடர  அனுமதிக்கமுடியாதென கூறியிருக்கும் UBER நிறுவனம், அடுத்த 6 மாதங்களுக்கு அவர்கள் Uber சேவையை பெற தடைவிதிக்கவும் முடிவுசெய்துள்ளது.

வருகிற 19 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இம்முறையை அமல்படுத்தவுள்ள UBER நிறுவனம், இம்முறையின்படி, வாடிக்கையாளரின் நடவடிக்கை குறித்து ஓட்டுனர் கொடுக்கும் தகவல்கள் ரேட்டிங்காக பதிவுசெய்யப்படும் என்றும், அதன்படி 5 க்கு தொடர்ந்து 4 அல்லது அதற்கு குறைவாக Rating பெறும் வாடிக்கையாளர்கள் சில எச்சரிக்கைகளுக்குப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு UBER வாடகை காரை பயன்படுத்த தடைவிதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளது.

ஓட்டுனரை பயணிகள் சிலர் அலைக்கழிப்பதாகவும், மரியாதை குறைவாக நடத்துவதாகவும் வந்த புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.