​​ நவீன துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க ரஷ்யாவிடம் இந்தியா எதிர்ப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவீன துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க ரஷ்யாவிடம் இந்தியா எதிர்ப்பு

Published : Sep 05, 2018 9:48 PM

நவீன துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க ரஷ்யாவிடம் இந்தியா எதிர்ப்பு

Sep 05, 2018 9:48 PM

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதை அடுத்து, நவீன துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க ரஷ்யாவிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்திய ராணுவத்திற்கு ஏகே 103 ரக துப்பாக்கியை தயாரிப்பதற்கான 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்ததை ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் கன்சனுக்கு வழங்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அதானி நிறுவனத்துடன் இணைந்து துப்பாக்கிகளை தயாரிக்க ரஷ்ய நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது.

ஆனால் அதானி நிறுவனத்திற்குப் பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவதளவாடப் பொருட்கள் நிறுவன வாரியத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் ரஷ்ய நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுனமான ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்காமல், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.