​​ காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தால் ஹர்திக் பட்டேலின் எடை 20 கிலோ குறைந்ததாக மருத்துவர்கள் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தால் ஹர்திக் பட்டேலின் எடை 20 கிலோ குறைந்ததாக மருத்துவர்கள் தகவல்

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தால் ஹர்திக் பட்டேலின் எடை 20 கிலோ குறைந்ததாக மருத்துவர்கள் தகவல்

Sep 05, 2018 5:35 PM

குஜராத் மாநிலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்திக் பட்டேலின் எடை 11 நாட்களில் 20 கிலோ குறைந்ததையடுத்து பட்டீதார் இனத் தலைவர்களை குஜராத் மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

பட்டீதார் இனத்துக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் இட ஒதுக்கீட்டு, விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரது உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளதாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இதனை அடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஹர்திக் ஆதரவாளர்களை குஜராத் அரசு அழைத்துள்ளது.