​​ நவீன உத்தியைக் கையாளத் தொடங்கிய சீன காவல்துறை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவீன உத்தியைக் கையாளத் தொடங்கிய சீன காவல்துறை

Published : Mar 14, 2018 12:06 AM

நவீன உத்தியைக் கையாளத் தொடங்கிய சீன காவல்துறை

Mar 14, 2018 12:06 AM

சீனாவில், ஸ்மார்ட் கிளாஸ் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து குற்றவாளிகளைக் கண்டறியும் நவீன உத்தியை, காவல்துறையினர் கையாளத் தொடங்கி உள்ளனர். எல்.எல்.விஷன் (LL Vision) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள், புலனாய்வுத்துறையால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள முக அடையாளம் உள்ளிட்ட தகவல்களுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

குற்றவாளிகள் யாரேனும் வாகனங்களில் சென்றால், சாலைகளின் முக்கியச் சந்திப்புகளில் இந்தக் கண்ணாடிகளை அணிந்து நிற்கும் போலீசாரின் கண்களில் இருந்து தப்ப முடியாது. ஏற்கனவே குற்றப்பட்டியலில் பதிவாகி இருக்கும் முகம் உள்ளிட்ட விவரங்களுடன் சாலையில் செல்லும் நபரின் அடையாளம் ஒத்திருப்பதை ஸ்மார்ட் கிளாஸ் எனும் நவீன கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடும்.

இத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் கண்காணிப்பு நடைமுறை விரைவில் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பொருட்களைத் தயாரிக்கும் ஸ்டேக்யு (Staqu) நிறுவனம், இதற்கான ஸ்மார்ட் க்ளாஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது.