​​ அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் வி.கே.ஜெயின் ராஜினாமா
Polimer News
Polimer News Tamil.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் வி.கே.ஜெயின் ராஜினாமா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகரான வி.கே.ஜெயின் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குடும்ப சூழல் மற்றும் சொந்த காரணங்களை கருதி ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் முதலமைச்சர் இல்லத்தில் வைத்து, எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்டதை வி.கே.ஜெயின் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார் என நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் கூறினர். ஆனால் முன்னதாக தான் எதையும் பார்க்கவில்லை என வி.கே.ஜெயின் மறுத்திருந்தார். தலைமைச் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து விடுப்பில் இருந்த ஜெயின் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.