​​ மனோகர் பாரிக்கர் புற்றுநோய்க்கு சிகிச்சை; கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனோகர் பாரிக்கர் புற்றுநோய்க்கு சிகிச்சை; கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை

மனோகர் பாரிக்கர் புற்றுநோய்க்கு சிகிச்சை; கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை

Sep 05, 2018 1:50 PM

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். ஆனால் பாரிக்கர் அமெரிக்காவில் இருந்தபடியே சிறப்பாக ஆட்சி நிர்வாகம் செய்வதாக பாஜக தெரிவித்துள்ளது.

மூத்த அமைச்சர்கள் பலர் கோவா அரசில் இடம் பெற்றுள்ளனர் என்றும் அவர்களால் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க முடியும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் சித்தார்த் குன்கோலெங்கர் தெரிவித்துள்ளார்.