​​ சென்னையில் சாலையோரங்களில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த 15 நாட்கள் கெடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் சாலையோரங்களில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த 15 நாட்கள் கெடு


சென்னையில் சாலையோரங்களில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த 15 நாட்கள் கெடு

Mar 13, 2018 7:00 PM

சென்னையில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பயனற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை பொதுமக்கள் சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்களில் நிறுத்தி வைப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அதன் காரணமாக, அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்குள் அகற்றப்படாத வாகனங்களை மாநகராட்சியே  கைப்பற்றி மண்டலம் வாரியாக ஏலம் விடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.