​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி செல்வதற்காக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

Published : Sep 05, 2018 1:47 PM

பள்ளி செல்வதற்காக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

Sep 05, 2018 1:47 PM

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்வதற்காக மாணவ, மாணவிகள் காட்டையும், ஆற்றையும் கடந்து செல்கின்றனர்.

ஹார்தா என்ற இடத்தில் விஎன் கிராம் என்ற இடத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி 7 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கின்றனர். ஆபத்தான வனப்பகுதியைக் கடந்து செல்லும் இவர்கள் நடுவே குறுக்கிட்டுச் செல்லும் ஆற்றினை உயிரைப் பணயம் வைத்து நீந்திக் கடந்து செல்கின்றனர்

உடுத்தியிருக்கும் சீருடை நனைந்தபோதும், படிக்கும் புத்தகத்தை தலைக்கு மேல் உயர்த்தியவாறு ஆற்றினைக் கடக்கின்றனர். அடிப்படை உரிமையான கல்விக்கு முக்கியத்துவம் தந்து இதுபோன்ற மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க மத்திய- மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.