​​ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்

Sep 05, 2018 12:40 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமியையொட்டி நடைபெற்ற உறியடி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு எதிரே உள்ள நாத நீராஞ்சன மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர கம்பத்தில் கிரீஸ் ஆயில் பூசப்பட்ட கம்பத்தின் மீது இருந்த பரிசு பொருட்களை எடுக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

உள்ளூர் இளைஞர்களும், பொதுமக்களும், பக்தர்களும் திரளாக பங்கேற்று உறியடி வழுக்கு மரம் ஏறி பரிசுப் பொருட்களை எடுத்தனர். இதனை தொடர்ந்து மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் தனித்தனி தங்க திருச்சி வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.