​​ தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!


தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!

Sep 05, 2018 12:37 PM

ராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர். அவர்களின் காவலுக்கு நாய் ஒன்று ஜீப்புக்கு முன்பாக படுத்திருந்தது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நாயை வேட்டையாட பாய்ந்து வந்த சிறுத்தையை கண்டு பயந்து ஓடாமல் தைரியமாக எதிர் கொண்டது அந்த நாய்

இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தை, நாய் குரைக்கும் சத்தம் கண்டு மிரண்டு போய் நின்றது. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு நாயை கண்டு பின்வாங்கிச் செல்லும் நிலைக்கு சிறுத்தை தள்ளப்பட்டது. சுற்றுலாப்பயணி ஒருவர் எடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.