​​ ஒன்றாக இருக்கும் நிறுவனங்களை 3ஆகப் பிரிக்க ஜிந்தால் முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒன்றாக இருக்கும் நிறுவனங்களை 3ஆகப் பிரிக்க ஜிந்தால் முடிவு

ஒன்றாக இருக்கும் நிறுவனங்களை 3ஆகப் பிரிக்க ஜிந்தால் முடிவு

Sep 05, 2018 12:31 PM

ஜிந்தால் எஃகு மற்றும் மின்உற்பத்தி நிறுவனம், தனது 42 ஆயிரம் கோடி ரூபாய் கடனை பிரித்து செலுத்த முடிவு செய்திருக்கிறது.

இதற்காக, ஒன்றாக இருக்கும் எஃகு, மின்உற்பத்தி, பன்னாட்டு வணிகம் ஆகிய நிறுவனங்களைத் மூன்றாக பிரித்து, தனித்தனி நிறுவனங்களாக இயக்குவதற்கு முடிவெடுத்திருப்பதாக, அவற்றின் தலைவர் நவீன் ஜிந்தால் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், தங்கள் நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, இந்த முயற்சியை முன்னெடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார். மூன்று நிறுவனங்களை தனித்தனியாக பிரிப்பதன் மூலம், தங்கள் நிறுவனத்தின் 42 ஆயிரம் கோடி ரூபாய் கடனும், மூன்றாக பிரிவதோடு, அவற்றை எளிதாக செலுத்துவதற்கும் வழிவகை ஏற்படும் என்றும் நவீன் ஜிந்தால் குறிப்பிட்டிருக்கிறார்.