​​ நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக கருதப்படும் ஜெயாபச்சன் தனது சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என குறிப்பிட்டுள்ளார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக கருதப்படும் ஜெயாபச்சன் தனது சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என குறிப்பிட்டுள்ளார்

நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக கருதப்படும் ஜெயாபச்சன் தனது சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என குறிப்பிட்டுள்ளார்

Mar 13, 2018 6:53 PM

நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக கருதப்படும் ஜெயாபச்சன் தனது சொத்து மதிப்பு ஆயிரம்கோடி ரூபாய் என அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர் தனது சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். பச்சன் குடும்பத்தினரின் அசையா சொத்துக்கள் 460 கோடி ரூபாயாகவும், அசையும் சொத்துகள் 540 கோடி ரூபாயாகவும் உள்ளது. 62 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா ஆகியவை சொத்துப் பட்டியலில் உள்ளன.

ரோல்ஸ்ராய்ஸ், மெர்சிடிஸ், போர்ச்சே, ரேஞ்ச்ரோவர், உள்ளிட்ட கார்கள் டிராக்டர் உட்பட 13 கோடி ரூபாய் மதிப்பிலான 12 வாகனங்கள்,  3 ஆயிரத்து 175 சதுர மீட்டர் பரப்பளவிலான குடியிருப்புகள் 7 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புள்ளி 2 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவையும் பச்சன் குடும்பத்தினரின் சொத்துக்களில் அடக்கம்