​​ அமேசான் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஒரு லட்சம் கோடி டாலராக உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமேசான் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஒரு லட்சம் கோடி டாலராக உயர்வு

அமேசான் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஒரு லட்சம் கோடி டாலராக உயர்வு

Sep 05, 2018 12:15 PM

ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக திகழும் அமேசான் நிறுவனம் ஒரு லட்சம் கோடி டாலர் சந்தை மூலதனத்தை எட்டியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் இந்த இலக்கை எட்டிய சில வாரங்களில், இரண்டாவதாக அமேசான் நிறுவனமும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது. அமெரிக்க பங்குசந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்கு, ஒன்று புள்ளி 4 சதவீதம் வரை உயர்ந்து 2 ஆயிரத்து 050 டாலராக உயர்ந்தது. கடந்த ஆண்டு அக்டேபர் மாதம் ஆயிரம் டாலராக இருந்த அமெசான் நிறுவனத்தின் ஒரு பங்கு 10 மாதங்களில் இருமடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

24 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில், வெறும் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அறையில் ஆரம்பிக்கப்பட்ட அமெசான் நிறுவனம், இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. அமெசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் உலகின் முதல் நிலை பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.