​​ இந்தியா-அமெரிக்கா அமைச்சர்களிடையே டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா-அமெரிக்கா அமைச்சர்களிடையே டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா அமைச்சர்களிடையே டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை

Sep 05, 2018 12:00 PM

இந்தியா -அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெறுகிறது.

மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜூம் நிர்மலா சீதாராமனும், அமெரிக்க அமைச்சர்கள் ஜிம் மாட்டிஸ் மற்றும் மைக் போம்பியோவுடன் நடத்த உள்ள இந்த பேச்சுவார்த்தையில், சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை ஒடுக்குவது, அதன் அதிகரித்து வரும் ராணுவ பலத்தை எதிர்கொள்வது,  எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை வேரறுப்பது, இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

தவிர்க்க இயலாத காரணங்களால் இரண்டு முறை இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தியாவுக்கு அதிநவீன ஆயுதங்களையும் கண்காணிப்பு, உளவுக்குப் பயன்படும் டிரோன் விமானங்களையும்  விற்பனை செய்வது போன்ற திட்டங்களை அமெரிக்க முன்வைத்துள்ளது. இரு நாட்டு கடற்படை விமானப்படையினர் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்வது குறித்தும் இந்தப் பேச்சுவாரத்தையில் விவாதிக்கப்பட உள்ளது.