​​ புதுச்சேரியில் தூக்கக் கலக்கத்தில் பேருந்தை ஓட்டிவந்ததால் சாலையோர மரத்தில் மோதி விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் தூக்கக் கலக்கத்தில் பேருந்தை ஓட்டிவந்ததால் சாலையோர மரத்தில் மோதி விபத்து

புதுச்சேரியில் தூக்கக் கலக்கத்தில் பேருந்தை ஓட்டிவந்ததால் சாலையோர மரத்தில் மோதி விபத்து

Jan 22, 2018 8:52 PM

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தை ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் ஓட்டிவந்ததால் சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருபுவனை அருகே வந்தபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

உடனடியாக ஓட்டுநரும் நடத்துனரும் பேருந்தை விட்டு இறங்கி தப்பியோடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் நிகழாத நிலையில், 10 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திருபுவணை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.