​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு

Published : Sep 05, 2018 11:27 AM



ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு

Sep 05, 2018 11:27 AM

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், படகுகளை அவர்களிடம் ஒப்படைப்பதில்லை. இவ்வாறு 192 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றை மீட்கக் கோரி கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து கட்சியினருடன் இணைந்து வரும் 7ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.