​​ ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஜெபி புயல்... 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஜெபி புயல்... 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Published : Sep 05, 2018 11:18 AM



ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஜெபி புயல்... 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Sep 05, 2018 11:18 AM

25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீசிய கடும் புயலால், ஜப்பானின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி ((jebi)) என்று பெயரிடப்பட்ட பெரும் புயல் தாக்கியது. 217 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ஆழிப்பேரலை போன்று அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு விசிறியடித்தன.

image

தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச் சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. கான்சாய் நகர விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அருகில் கடலில் கட்டப்பட்டிருந்த பாலத்தில் கப்பல் மோதியதில் பாலமும், கப்பலும் சேதமடைந்தன.

image

காற்றின் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மின் கம்பங்களும், ஆயிரக்கணக்கான மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் புயலின் தாக்குதலால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் 100க்கும் அதிகமான கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

image

அதிதீவிரப் புயலாக ஜெபி அறிவிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதியில் இருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டனர். இருப்பினும் மழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜெபி புயல் கடும் சேதத்தை உண்டாக்கியிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.