​​ பெட்ரோல்- டீசலுக்கு வரிக்குறைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல்- டீசலுக்கு வரிக்குறைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டம்


பெட்ரோல்- டீசலுக்கு வரிக்குறைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டம்

Sep 05, 2018 11:10 AM

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கும்,ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனையானது. தினசரி அதிகரித்து வரும் இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது.

மேலும் வாகனங்களுக்கான வாடகைக் கட்டணமும் உயர்ந்து வருவதால் பொதுமக்களின் சிரமம் பன்மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரிவிதிப்பைக் குறைக்கவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருவதால் இறக்குமதி செலவும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதனால் இலக்கை விட நடப்புக் கணக்கு பற்றாக்குறையாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்து நிதிப்பற்றாக்குறையில் கை வைக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 ரூபாய் 48 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இது தவிர தமிழகத்தில் பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.