​​ பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து திருடப்படும் மின்சாரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து திருடப்படும் மின்சாரம்

பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து திருடப்படும் மின்சாரம்

Sep 05, 2018 2:47 AM

ராமேஸ்வர் சங்குமால் கடற்கரை பூங்காவுக்கு தடுப்புச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தாரர், தண்ணீர் விநியோகத்திற்காக, லாரியில் உள்ள மோட்டாரை இயக்க, பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து, மின்சாரத்தை திருடும் அவலம் அரங்கேறுவது கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சங்குமால் கடற்கரையில், 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில், பூங்காவும், தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் ரவி என்பவர், தனது கட்டுமான பணிகளுக்கு லாரி மூலம் தண்ணீர் எடுத்து வருகிறார். பின்னர், அந்த லாரியிலிருந்து மற்றொரு தற்காலிக தண்ணீர் தொட்டிக்கு அதை மாற்றுகிறார். இவ்வாறு தற்காலி தொட்டிக்கு தண்ணீரை மாற்றுவதற்காக, லாரியில் உள்ள மின்மோட்டாரை இயக்க, பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து, மின்சாரத்தை திருடி பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது.