​​ சட்ட பல்கலை கழக NRI ஒதுக்கீட்டு முறைக்கேட்டில் முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி லாக்கரில் சிக்கிய ஆவணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்ட பல்கலை கழக NRI ஒதுக்கீட்டு முறைக்கேட்டில் முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி லாக்கரில் சிக்கிய ஆவணம்

Published : Sep 05, 2018 2:32 AM

சட்ட பல்கலை கழக NRI ஒதுக்கீட்டு முறைக்கேட்டில் முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி லாக்கரில் சிக்கிய ஆவணம்

Sep 05, 2018 2:32 AM

சட்ட பல்கலை கழக என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு முறைக்கேட்டில் சிக்கியுள்ள முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி லாக்கரில் சிக்கிய ஆவணங்களில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு எல்.எல்.பி. பட்டப்படிப்பில் 15 சதவீதம்வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக (என்ஆர்ஐ கோட்டா) ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ கோட்டாவில் அனுமதி அளித்து பல கோடி மோசடி நடந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி, பல்கலைக்கழக தொலை தொடர்புத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் சர்வானி, பதிவாளர் பொறுப்பு வகித்த பாலாஜி, உதவி பதிவாளர் பொறுப்பு வகித்த டாக்டர் அசோக்குமார், துணை பதிவாளர் ஜெய்சங்கர், தலைமை நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் மீது கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கடந்து 2016- 17-ம் ஆண்டில் இந்த முறைக்கேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2014-15ம் ஆண்டு, 2015-16 ஆண்டுகளிலும் இதே ஒதுக்கீட்டில் முறைக்கேடு செய்து முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி பலகோடி குவித்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.  பொதுவாக எல்.எல்.பி. சீட் அனுமதியில் 15 சதவீதம்வரை என்ஆர்ஐ கோட்டா அடிப்படையில் மாணவர்களை சேர்க்கலாம்.

இதற்காக மாணவனின் நெருங்கிய உறவினர் வெளிநாட்டில் வசிப்பவராகவும், வெளிநாட்டுவாழ் இந்தியர் என்ற அடையாள அட்டை, வெளிநாட்டு பாஸ்போர்ட், வெளிநாட்டில் வேலை செய்வதற்கான சான்றிதழ், வெளிநாட்டில் வாழும் உறவினரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் டாலர் பணம் உள்ளிட்ட 26 ஆவணங்கள் இதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த ஆவணங்கள் அடிப்படையில்தான் மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறுமனே வெளிநாட்டு பாஸ்பேர்ட், ஒர்க்கிங் பர்மிட் உள்ளிட்ட சில ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பெறாமல், பல ஆவணங்கள் போலியாகவும் கொடுத்து மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் போன்று பல முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என கூறி போலி ஆவணங்கள் மூலம் கல்லாரியில் சேர்த்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. என்ஆர்ஐ கோட்டாவில் போலி ஆவணங்கள் மூலம் சேர்க்கைக்கு ஒரு சீட்டிற்கு ரூ.10 லட்சம் வரை லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன் ஜாமீன் பெற்ற வணங்காமுடி விசாரணையில் இருந்த தப்பிக்க ஆஸ்திரேலியா சென்றுவிட இந்த சந்தர்பத்தில் அவரது வீட்டிற்குள் சோதனை நடத்தி வணங்காமுடியின் லாக்கரில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆவணங்கள் அனைத்தும் முறைக்கேடாக சம்பாதித்த பல கோடி சொத்துக்களின் ஆவணங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அவசரமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லவேண்டும் என கோர்ட்டில் அனுமதிபெற்று சென்றுவிட்ட வணங்காமுடி நவம்பர் மாதம்தான் மீண்டும் சென்னைக்கு திரும்புவார். இருப்பினும் இவருக்கு எதிரான ஆவணங்கள் கிடைத்துள்ளதால் இவரை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன