​​ தமிழக அரசு - ஆஸ்திரேலியா இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசு - ஆஸ்திரேலியா இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழக அரசு - ஆஸ்திரேலியா இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Mar 13, 2018 6:29 PM

தமிழக அரசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை, சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய அனைத்து துறைகளின் மேம்பாடு ஆகியவை தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மீன்வளம், மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடு, மீன் உற்பத்தியை பெருக்குதல், நிலைத்த நீடித்த மீன்வளத்தை உறுதி செய்தல் மீன்வள ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவை தொடர்பாக ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.