​​ கார் சாகச விபத்தில் நடிகர் ஜெயராம்..? அதிர்ச்சி தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார் சாகச விபத்தில் நடிகர் ஜெயராம்..? அதிர்ச்சி தகவல்


கார் சாகச விபத்தில் நடிகர் ஜெயராம்..? அதிர்ச்சி தகவல்

Sep 05, 2018 12:21 AM

சமூக வலைதளங்களில், தான் விபத்தில் சிக்கியதாக பரபரப்படும் விபத்து தொடர்பான வீடியோ காட்சியில் இருப்பது தான் அல்ல என்று நடிகர் ஜெயராம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியில் கரடு முரடான வழிதடத்தில் ஜீப்பை இயக்குவது நடிகர் ஜெயராம் என்றும் இந்த ஜீப் தறிகெட்டு பின்னால் பாய்ந்த வேகத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகர் ஜெயராமுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர் உயிருக்கு போராடுவதாகவும் வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது .

இந்த வீடியோ காட்சியில் உள்ள ஜீப்பைல் கே.எல் என்ற கேரள வாகன பதிவெண், மற்றும் தேயிலை தோட்டத்துடன் இருப்பதால் இதில் உண்மை இருக்கும் என நம்பி பலருல் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சியில் இருப்பது தான் அல்ல என்று மறுத்துள்ள நடிகர் ஜெயராம் . இது தாய்லாந்து நாட்டில் நடந்த நிகழ்வு என்று விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவும் பெரும்பாலான தகவல்கள் உறுதி படுத்தப்பட்டு வெளியாவதில்லை என்பதற்கு இந்த வீடியோ காட்சி குறித்து பரப்பப்படும் வதந்திகளும் ஒரு சாட்சி..!