​​ இந்தியச் சந்தையில் கூகுள், ஃபேஸ்புக் இடையே கடும் போட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியச் சந்தையில் கூகுள், ஃபேஸ்புக் இடையே கடும் போட்டி

இந்தியச் சந்தையில் கூகுள், ஃபேஸ்புக் இடையே கடும் போட்டி

Sep 04, 2018 11:46 PM

இந்தியச் சந்தையில் கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே விளம்பர வருமானத்தை ஈர்க்க கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியாவில் இணைய தேடுதல் பணிகளுக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதையடுத்து அதன் விளம்பர வருமானம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான விளம்பர வருமானமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஃபேஸ் புக் நிறுவனத்தின் வருமானம் 98 கோடி டாலராக உள்ள நிலையியில் கூகுளின் வருமானம் அதைவிட சற்றே அதிகமாக 100 கோடி டாலராக மட்டுமே உள்ளது. இதையடுத்து கடும் போட்டியைச் சமாளிக்க கூகுள் நிறுவனம் விளம்பர வாடிக்கையாளர்களை கவர புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.