​​ கோயிலுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயிலுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர் கைது


கோயிலுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர் கைது

Sep 04, 2018 11:41 PM

சென்னை மண்ணடியில் கோயிலுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 11-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தெய்வ பக்தி கொண்ட இவர் அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு அவ்வப்போது செல்லும் வழக்கமுடையவர். இந்நிலையில் மாணவியிடம் அன்பாக பேசுவது போல் நடித்த அர்ச்சகர் நடராஜ், கோவிலுக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள கழிவறையில் மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான மாணவியின் பெற்றோர் புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அர்ச்சகர் நடராஜனை கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியிடம் அன்பாக பேசுவது போல் நடித்து அர்ச்சகர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக கருதப்படும் கோயிலிலேயே அத்துமீறலில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு கடுமையான தண்டனை விதிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.