​​ ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை - பல்வேறு அமைப்புகள் கண்டனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை - பல்வேறு அமைப்புகள் கண்டனம்


ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை - பல்வேறு அமைப்புகள் கண்டனம்

Sep 04, 2018 11:20 PM

ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு, மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கு, ஊடக உலகமும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மியான்மர் ராணுவம் நிகழ்த்திய ரோஹிங்யா முஸ்லீம்களின் படுகொலையை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர்கள் வா லோன்((Wa Lone)), கியாவ் சோஏ ஓ((Kyaw Soe Oo)) ஆகியோர் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பான, காவல்துறையினரின் ரகசிய ஆவணங்களை இருவரும் சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 2ஆம் தேதி மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என கண்டனம் எழுந்திருப்பதோடு, "இது மியான்மரின் துயரமான நாள்" என மியான்மர் நாட்டின் முன்னணி பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டியுள்ளன. மியான்மரின் 7 Day Daily என்ற செய்தித்தாள் தனது முகப்பு பக்கத்தை, பாதி பகுதியை முழுமையாக கருப்பு நிறத்தில் அச்சிட்டு, தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.