​​ 2013 - 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்கள் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2013 - 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்கள் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு

Published : Sep 04, 2018 11:16 PM



2013 - 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்கள் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு

Sep 04, 2018 11:16 PM

2013 முதல் 2018 வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்களின் புள்ளி விவரத்தை மத்திய கலால்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஆலையின் முதல் யூனிட்டிற்கு தவறான தகவல்களை கொடுத்து மத்திய சுற்றுசூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காப்பர், தாமிரம், ஆர்சனிக் உள்ளிட்ட வேதி பொருட்கள் உரிய முறையில் வெளியேற்றப்படவில்லை என்றும், நீர் மற்றும் காற்று மாசு சட்டத்துக்கு மாறாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு 2013 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை இறக்குமதி செய்யபட்ட மூலபொருட்களின் புள்ளி விவரத்தை மத்திய கலால்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.