​​ அமேசான் மொபைல்போன் இணைய பக்கம் இந்தியிலும் வடிவமைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமேசான் மொபைல்போன் இணைய பக்கம் இந்தியிலும் வடிவமைப்பு

Published : Sep 04, 2018 10:37 PMஅமேசான் மொபைல்போன் இணைய பக்கம் இந்தியிலும் வடிவமைப்பு

Sep 04, 2018 10:37 PM

அமேசான் நிறுவனம், மொபைல் போனில் தனது இணைய பக்கத்தை நாடுவோருக்காக, இந்தி மொழியில் இணைய பக்கத்தை வடிவமைத்திருப்பதுடன், இந்தி மொழியிலான செயலியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக சந்தையில், வால்மார்ட்டின் ஃபிலிப்கார்ட்டிற்கும் (( Walmart’s Flipkart)), அமேசானுக்கும்((Amazon)) இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆங்கிலம் தெரியாத வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில், பிராந்திய மொழிகளில், தனது இணையதளத்தையும், செயலியையும் வடிவமைக்க அமேசான் முடிவு செய்தது.

இதன்படி, இந்தி மொழியில், அமேசான் இணையதளமும், செயலியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் வசிக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என நம்புவதாக, அமேசான் இந்தியா துணைத்தலைவர் மணிஷ் திவாரி கூறியிருக்கிறார்.