​​ சென்னை ராயப்பேட்டையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ராயப்பேட்டையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

சென்னை ராயப்பேட்டையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Mar 13, 2018 6:20 PM

சென்னை ராயப்பேட்டையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை பெருமாள் தெருவில், மென்பொறியாளர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

திங்கட்கிழமை பணிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.