​​ 11ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஹர்த்திக் உடல் எடை 20 கிலோ குறைந்தது: மருத்துவர்கள் எச்சரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
11ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஹர்த்திக் உடல் எடை 20 கிலோ குறைந்தது: மருத்துவர்கள் எச்சரிக்கை

Published : Sep 04, 2018 9:04 PM11ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஹர்த்திக் உடல் எடை 20 கிலோ குறைந்தது: மருத்துவர்கள் எச்சரிக்கை

Sep 04, 2018 9:04 PM

குஜராத்தில் மாநிலத்தில், பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, அகமதாபாத்தில், 11ஆவது நாளாக  உண்ணாநிலை மேற்கொண்டுள்ள ஹர்த்திக் பட்டேலின்((Hardik Patel)) உடல் எடை 20 கிலோ குறைந்திருப்பதுடன், உடல்நலம் மோசமாகி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, குஜராத் மாநில அரசின் உத்தரவின்படி, ஐசியு அமைப்புடன் கூடிய அவசரகால ஆம்புலன்ஸ், ஹர்த்திக் பட்டேல் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தின் அருகே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் வாழும் படேல் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் ((Patidar Anamat Andolan Samiti)) தலைவர் ஹர்த்திக் படேல், கடந்த மாதம் 25-ம் தேதி உண்ணாநிலையைத் தொடங்கினார்..

11ஆவது நாளாகத் தொடரும் இவரின் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட, பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.