​​ நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு..!


நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு..!

Sep 04, 2018 8:20 PM

நாடு முழுவதும், 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 விமான நிலையங்களை கட்டமைக்க மைய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள், நூறு விமான நிலையங்களை நிர்மாணிக்க உத்தேசித்திருப்பதாக கூறியுள்ளார். தனியார் பங்களிப்புடன் கூடிய கூட்டு ஒப்பந்த முறையில் அவை கட்டமைக்கப்படும் என்றார்.

இதன்மூலம், விமான போக்குவரத்தின் மூலம், விமான பயணிகளையும், சரக்குகளையும் கையாளும், மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழும் என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.