​​ மலையாள நடிகர் மோகன்லால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலையாள நடிகர் மோகன்லால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்


மலையாள நடிகர் மோகன்லால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்

Sep 04, 2018 8:08 PM

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, மோகன்லால் சந்தித்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கு, மோகன்லாலும் இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு, சவலாக உருவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.