​​ ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தீபா உள்ளிட்ட 7 பேரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தீபா உள்ளிட்ட 7 பேரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தீபா உள்ளிட்ட 7 பேரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

Sep 04, 2018 7:42 PM

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் மாதவன் உள்ளிட்ட 7 பேரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடைபெற்றது. 

தீபா, மாதவன், தி.மு.க. மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் சரவணன், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் மற்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாங்கள் விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் தொடக்கத்தில் மனு தாக்கல் செய்த ஜோசப், மதுரை பாலன், பாலமுருகன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் செப்டம்பர் 22-ஆம் தேதி கோமா நிலையில் இருந்த ஜெயலலிதா 23-ஆம் தேதி ஆளுனருக்கு கடிதம் அனுப்பியதை நம்பமுடியவில்லை என்றார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக பெறப்பட்ட ஜெயலலிதாவின் கை ரேகையை தனியார் தடயவியல் நிறுவனத்திடம் கொடுத்து ஆய்வு செய்ததில் முரண்பாடுகள் இருந்ததாகவும் தெரிவித்தார். 

சிகிச்சை அளித்த சிங்கப்பூர்  மருத்துவர்களையும் விசாரணைக்கு அழைக்கவும், சிகிச்சைக்குக் தடையாக இருந்தவர்கள் யார் என கண்டறியவும், ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை அளித்த பின் அதனை தமிழக அரசு வெளியிடவும் ஆனூர் ஜெகதீசன் வலியுறுத்தினார்.