​​ பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் - செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் - செங்கோட்டையன்

Published : Sep 04, 2018 6:58 PM

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் - செங்கோட்டையன்

Sep 04, 2018 6:58 PM

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் எனத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் நாளையொட்டி 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். தூய்மையான 40 பள்ளிகளுக்குப் புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.