​​ இஸ்லாமாபாத் கிளப்பில் இந்திய தூதர்களை அனுமதிக்க பாகிஸ்தானின் புதிய அரசு முடிவு எனத் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்லாமாபாத் கிளப்பில் இந்திய தூதர்களை அனுமதிக்க பாகிஸ்தானின் புதிய அரசு முடிவு எனத் தகவல்

Published : Sep 04, 2018 4:38 PM

இஸ்லாமாபாத் கிளப்பில் இந்திய தூதர்களை அனுமதிக்க பாகிஸ்தானின் புதிய அரசு முடிவு எனத் தகவல்

Sep 04, 2018 4:38 PM

இஸ்லாமாபாத் கிளப்பில் இந்திய தூதர்களை அனுமதிக்க பாகிஸ்தானின் புதிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள ஜிம்கானா மற்றும் கோல்ஃப் கிளப்பில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உறுப்பினர்களாவதற்கான தொகை அதிகளவு இருப்பதாக அந்நாட்டின் முந்தைய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள கிளப்பில் இந்திய தூதரக அதிகாரிகள் உறுப்பினராவதற்கான தடையில்லாச் சான்று வழங்கப்படாமல் கடந்த 9 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தலைமையிலான அரசு, இந்திய தூதரக அதிகாரிகளை இஸ்லாமாபாத் கிளப்பில் சேர்ப்பதற்கான தடையில்லாச் சான்றுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.