​​ காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

Sep 04, 2018 4:34 PM

கும்பகோணம் அருகே காரில் கடத்தப்பட்ட குட்கா போதைபொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இன்னோவா காரை நிறுத்துமாறு சைகை செய்தனார். ஆனால் கார் நிற்காமல் சென்றதால், அதனை துரத்திச் சென்ற போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் காருக்குள் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கார் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,  கடத்தல் தொடர்பாக இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.