​​ அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர்,மரிய சரபோவா தோல்வி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர்,மரிய சரபோவா தோல்வி

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர்,மரிய சரபோவா தோல்வி

Sep 04, 2018 4:27 PM

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்ய வீராங்கனை மரிய சரபோவா ஆகியோர் தோற்று வெளியேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் ஆகியோர் விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் மூன்றுக்கு ஆறு, ஏழுக்கு ஐந்து, ஏழுக்கு ஆறு, ஏழுக்கு ஆறு என்கிற செட் கணக்கில் ஜான் மில்மேன் வெற்றிபெற்றுக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

மகளிர்பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரிய சரபோவா, ஸ்பெயின் வீராங்கனை கர்லா சுவாரஸ் நவரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் கர்லா சுவாரஸ் நவரோ ஆறுக்கு நான்கு, ஆறுக்கு மூன்று என்கிற நேர் செட் கணக்கில் சரபோவாவை வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறினார். கர்லாவின் 30ஆவது பிறந்த நாளன்று அவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.