​​ ராசிபுரம் அருகே, மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான லாரி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராசிபுரம் அருகே, மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான லாரி

Published : Sep 04, 2018 4:24 PM

ராசிபுரம் அருகே, மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான லாரி

Sep 04, 2018 4:24 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, மேம்பாலத்தில் இருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து சேலத்திற்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி, ராசிபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பாலம் ஒன்றின் தடுப்புச் சுவரில் மோதிய லாரி, பாலத்தை தாண்டி கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநரும், கிளீனரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.